அண்மைய செய்திகள்

recent
-

முடிவுக்கு வந்தது 16 மணித்தியால பரபரப்பு; பணயக்கைதிகள் பாதுகாப்பாக மீட்பு, மூவர் பலி

அவுஸ்திரேலிய சிட்னி நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை அந்நாட்டு பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இஸ்லாமிய கிளர்ச்சியாளர் என சந்தேகிக்கப்பட்ட நபரால் சிலர் நேற்று காலை முதல் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் மீட்பு நடவடிக்கையின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மக்களை பணயக்கைதிகளா தடுத்து வைத்திருந்த நபர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டொரி ஜோன்சன் மற்றும் கத்ரினா டோசன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு வேளையில் பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, 16 மணித்தியாலங்களாக நீடித்த பரபரப்பு சம்பவம் முடிவுக்கு வந்தது. தங்களது மீட்பு நடவடிக்கை நிறைவடைந்துவிட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர் ஈரான் அகதி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்த சிலர் சிட்னி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 9.45ற்கு ஆரம்பமான பொலிஸாரின் மீட்பு நடவடிக்கைகள் இரவு நேரத்திலும் தொடர்ந்ததாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை 2.45ற்கு மீட்பு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன.

பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தகவர்களில் ஐவர் 6 மணித்தியாலங்களின் பின்னர் பாதுகாப்பாக தப்பி பொலிஸாரிடம் சரணடைந்தனர்.

அவுஸ்ரேலியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டம் நடுத்தரத்திலிருந்து உயர்வானதிற்கு அதிகரிக்கப்பட்டுள்ள மூன்று மாதங்களில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

sydney-siege sydney
முடிவுக்கு வந்தது 16 மணித்தியால பரபரப்பு; பணயக்கைதிகள் பாதுகாப்பாக மீட்பு, மூவர் பலி Reviewed by NEWMANNAR on December 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.