சிறிகொத்தவில் மோதல் ; பலர் காயம்
ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் சிறிகொத்தவிற்கு வெளியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதன்போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு சிறிகொத்த கட்சி தலைமையகத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிசார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
(முதலாம் இணைப்பு)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள சிறிகொத்தவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொதுவேட்பாளர் மைத்திரியின் ஆதவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சிறிகொத்த மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
![]() |
மோதலின் போது சிறிகோத்தா முன்பிருந்த புத்தரின் சிலையும் தாக்குதலில் சேதமாக்கப்பட்டுள்ளது. |
சிறிகொத்தவில் மோதல் ; பலர் காயம்
Reviewed by NEWMANNAR
on
December 25, 2014
Rating:

No comments:
Post a Comment