அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பிரபல பாடசாலைகளில் தரம் -01 இற்கு மாணவர்களை அனுமதிக்க பணம் அறவிடப்படுவதாக பெற்றோர் விசனம்

இவ்வரும் தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகள் சிலவற்றில் பணம் அறவிடப்படுவதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களை அனுமதிப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்பதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.அதே வேளை பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு குறைந்த கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் பணமும்,மாணவர்களுக்கான கதிரை,மேசை போன்ற தளபாடங்களையும் கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் உள்ள பிரபல அரச பாடசாலைகளில் இவ்வாறான அதி கூடிய பணம் நன்கொடை என்ற பெயரில் இலஞ்சமாக அறவீடு செய்யப்படுகின்றமை  குறித்து எந்த அதிகாரிகளும் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளுவதில்லலை என பாதீக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பணம் அறவீடு செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களினூடாகாவே அறவீடு செய்யப்பட்டு வருகின்றது.குறித்த பாடசாலைகளுக்கு அரசின் பல்வேறு அபிவிருத்தி வேளைத்திட்டங்கள் பலவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே அரச பாடசாலைகளில் இவ்வாறு பணம் அறவீடு செய்யப்படுகின்றமையினால் வரிய பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே வடமாகாண கல்வி அமைச்சர்,மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் இவ்வியைத்தில் அக்கரை செலுத்தி பணம் அறவீடு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதீக்கப்பட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் பாடசாலைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பாடசாலைகளின் பெயர் விபரங்களை வெளியிடவில்லை.

-இவ்விடையம் தொடர்பாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,,

-பணம் அறவீடு தொடர்பில் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.இவ்விடையம் தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு தெரியப்படுத்தியுள்லேன்.

-மாணவர்களிடம் ஒரு சதம் கூட பெற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு பணம் அறவீடு தொடர்பில் உரிய முறையில் ஆதாரங்களுடன் சமர்ப்பித்தால் குறித்த பாடசாலை அதிபர்களுக்கு எதிராக உடனடியாக தகுந்த நடவடிக்கை ஏற்படும்.

அவர்கள் தமது பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.இப்பிரச்சினை தொடர்பில் நான் வடமாகாண கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.என அவர் தெரிவித்தார்.


மன்னாரில் பிரபல பாடசாலைகளில் தரம் -01 இற்கு மாணவர்களை அனுமதிக்க பணம் அறவிடப்படுவதாக பெற்றோர் விசனம் Reviewed by Admin on January 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.