புனித பாப்பரசரின் மடு விஜயத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி..(Photos)
Oபுனித பாப்பரசரின் மடு விஜயத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மடு தேவாலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ் பிள்ளை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
நாளை புதன் கிழமை 14 ஆம் திகதி மாலை 2 மணிக்கு மடுத் தேவாலயத்திற்கு புனித பாப்பரசர் வருகை தரவுள்ளார்.
இதனால் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுமார் 5 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாப்பரசரின் வருகையின் போது மடுத் திருத்தலத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு கடமைகள் முழுமையாக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2600 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை விட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுப் பொலிஸாரும் ஆலயத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளனர். பாப்பரசரின் வருகைக்காக வத்திக்கான் பொலிஸாரும் மடுத்தேவலாயத்தில் காவல் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
மடுத்திருதலத்தில் நாளை புதன் கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை மாதா புகழ்ச்சி வழிபாட்டில் பங்கு கொண்டு மக்களுக்கு இறை ஆசி வழங்குவார்.
இதன் போது சிறுவர் சிறுமிகள், இளைஞர் யுவதிகள், குருக்கள், அருட்சகோதரிகள், கத்தோலிக்க மக்கள், கத்தோலிக்கர் அல்லாத மக்களையும் போரினால் உடல் நலம் குன்றிய மக்களையும் சந்தித்து தமது உடனிருப்பையும் இறை கரிசனையையும் பாப்பரசர் வெளிப்படுத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புனித பாப்பரசரின் மடு விஜயத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி..(Photos)
Reviewed by Admin
on
January 13, 2015
Rating:

No comments:
Post a Comment