மன்னார் மாவட்டத்தில் இம்முறை 78,433 பேர் வாக்களிக்கத்தகுதி.
வன்னி தேர்தல் தொகுதியான மன்னார் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இம்முறை 78,433 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் 70 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 32 வாக்குச்சாவடிகளும், நானாட்டான் பிரதேசச் செயலளர் பிரிவில் 12 வாக்குச் சாவடிகளும்,முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 8 வாக்குச் சாவடிகளும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 6 வாக்குச் சாவடிகளும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 12 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளது.
-இதே வேளை மன்னார் மாவட்டத்தில் 2,546 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் இம்முறை 78,433 பேர் வாக்களிக்கத்தகுதி.
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:


No comments:
Post a Comment