விதைத்ததில் விளைந்தது – வலி.கிழக்குப் பிரதேசம் குறித்த நூல் வெளியீட்டு விழா
ஊடகவியலாளர் அச்சுவேலியூர் மா.ஞானலிங்கம் எழுதிய விதைத்ததில் விளைந்தது என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் முன்னிலை வகிப்பார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன்; சி.நிதர்ஷன் தமிழ்த்தெய்வ வணக்கம் இசைப்பார்.யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் நா.மகேந்திரராசா வரவேற்புரையை ஆற்றுவார்.
நிகழ்வில் ஆசியுரைகளை வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையின் உபதலைவர் நீர்வைமணி கு.தியாகராஜக் குருக்களும் அச்சுவேலி பங்குத் தந்தை அருட்பணி கு.யே.அன்ரனிபாலா ஆகியோர் ஆசியுரைகளை வழங்குவர். வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் ம.பிரதீபன் தொடக்கவுரையையும் உதயன் பிரதம ஆசிரியர் ம.வ. கானமயில்நாதன் வெளியீட்டுரையையும் ஆற்றுவர். சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்ட உப ஆளுநர் லயன் டாக்டர் வை.தியாகராசா நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வார். நூலின் மதிப்பீட்டுரையை யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பியும் அறிமுகவுரையை மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரனும் வழங்குவர்.
யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ச.அமிர்தலிங்கம், வடக்கு மாகாண சுதேச வைத்தியத் திணைக்கள ஆணையாளர் டாக்டர் சியாமா துரைரத்தினம் கோப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.சற்குணராசா, புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி அதிபர் இ.இராஜமகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரைகளை ஆற்றவுள்ளனர். நூலாசிரியரின் புதல்வரும் முல்லைத்தீவுக் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய ஞான. ஆதவன் நன்றியுரையை ஆற்றுவார்.
இந்நூல் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு சிறப்புக்கள் குறித்து உதயன் பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட வலி.கிழக்கு வலம் பகுதியின் தொகுப்பு நூலாகும்.

        Reviewed by NEWMANNAR
        on 
        
January 16, 2015
 
        Rating: 
      
        Reviewed by NEWMANNAR
        on 
        
January 16, 2015
 
        Rating: 

No comments:
Post a Comment