மன்னார் நீதிமன்ற வளாகத்திலமைந்துள்ள இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவானது அகில இலங்கை ரீதியில் முதலிடம்
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவானது 1978 ம் ஆண்டின் 27 ம் இல சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.சுமார் 76 பிராந்திய அலுவலகங்களைக்கொண்ட இவ்வாணைக்குழுவின் மன்னார் அலுவலகமானது மன்னார் நீதிமன்ற வளாகத்திலமைந்துள்ளது.
குடியிருப்பு காணி சொத்துக்கள் குடும்ப வன்முறை தாபரிப்பு விவாகரத்து பிறப்பு விவாக இறப்பு பிரசா உரிமை சான்றிதழ்கள் மற்றும் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளிற்கான ஆலோசனைகள் இசட்டம் தொடர்பான பயிற்சிகள் விழிப்புணர்வு கருத்தரங்குகள் என்பவற்றை நடாத்திவருகின்றது.
மாதாந்தம் ரு20000 குறைந்த வருமானமுடையவர்களிற்கு இலவசமாக வழக்குகளை தாக்கல் செய்து வருவதுடன் சட்ட உதவியை நாடும் மக்கள் அனைவருக்கும் தகவல் சட்ட உதவி சட்ட ஆலோசனை மற்றும் பரிந்துரை மூலம் நீடித்து நிலைக்கும் தீர்வை எடுக்க உதவுதல் ஆகியன பிரதான கடமைப்பரப்புகளாகும்.
76 பிராந்திய அலுவலகங்களைக்கொண்ட இவ்வாணைக்குழுவில் சிறந்த சேவையினை ஆற்றும் அலுவலகமாக மன்னார் நீதிமன்ற வளாகத்திலமைந்துள்ள இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவானது அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது.இவ்விருதினை இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பணிப்பாளாரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கௌரவ ரொகான் சகபந்து அவர்கள் வழங்கி வைத்தார்.
குடியிருப்பு காணி சொத்துக்கள் குடும்ப வன்முறை தாபரிப்பு விவாகரத்து பிறப்பு விவாக இறப்பு பிரசா உரிமை சான்றிதழ்கள் மற்றும் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளிற்கான ஆலோசனைகள் இசட்டம் தொடர்பான பயிற்சிகள் விழிப்புணர்வு கருத்தரங்குகள் என்பவற்றை நடாத்திவருகின்றது.
மாதாந்தம் ரு20000 குறைந்த வருமானமுடையவர்களிற்கு இலவசமாக வழக்குகளை தாக்கல் செய்து வருவதுடன் சட்ட உதவியை நாடும் மக்கள் அனைவருக்கும் தகவல் சட்ட உதவி சட்ட ஆலோசனை மற்றும் பரிந்துரை மூலம் நீடித்து நிலைக்கும் தீர்வை எடுக்க உதவுதல் ஆகியன பிரதான கடமைப்பரப்புகளாகும்.
76 பிராந்திய அலுவலகங்களைக்கொண்ட இவ்வாணைக்குழுவில் சிறந்த சேவையினை ஆற்றும் அலுவலகமாக மன்னார் நீதிமன்ற வளாகத்திலமைந்துள்ள இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவானது அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது.இவ்விருதினை இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பணிப்பாளாரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கௌரவ ரொகான் சகபந்து அவர்கள் வழங்கி வைத்தார்.
மன்னார் நீதிமன்ற வளாகத்திலமைந்துள்ள இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவானது அகில இலங்கை ரீதியில் முதலிடம்
Reviewed by NEWMANNAR
on
January 16, 2015
Rating:

No comments:
Post a Comment