அண்மைய செய்திகள்

recent
-

பபுவா நியூகினியை உலுக்கிய 7.5 ரிச்டர் பூமியதிர்ச்சி


பபுவா நியூ­கினி கடற்­க­ரைக்கு அப்பால் 7.5 ரிச்டர் அள­வான பாரிய பூமி­ய­திர்ச்சி திங்­கட்­கி­ழமை தாக்கியுள்ளது.

மேற்­படி பூமி­ய­திர்ச்­சியால் கட்­ட­டங்கள் நடுங்­கி­யதால் மக்கள் அல­றி­ய­டித்துக் கொண்டு வீடு­களை விட்டு வெளி­யேறி திறந்த வெளி­க­ளையும் வீதி­க­ளையும் தஞ்­ச­ம­டைந்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

நியூ பிரிட்டன் தீவு­க­ளி­லுள்ள கொகொபோ நக­ரி­லி­ருந்து 55 கிலோ­மீற்றர் தொலைவில் 33 கிலோ­மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்தப் பூமி­ய­திர்ச்­சி­யை­ய­டுத்து சுனாமி பேரலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்ட போதும், பின்னர் அது நீக்­கப்­பட்­டது. பிர­தான பூமி­ய­திர்ச்­சி­யை­ய­டுத்து அதே பிர­தே­சத்தில் 5.7 ரிச்டர் அள­வான பிறி­தொரு பூமி­ய­திர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்த பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இது வரை அறிக்கையிடப்படவில்லை
பபுவா நியூகினியை உலுக்கிய 7.5 ரிச்டர் பூமியதிர்ச்சி Reviewed by NEWMANNAR on March 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.