அண்மைய செய்திகள்

recent
-

19 ஆவது திருத்தத்திற்கு சு.க. ஆதரவு வழங்காது



 அர­சியல் அமைப்பு விதி­ மு­றைக்கு முர­ணான வகையில் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை நிறை­வேற்ற முயற்­சிக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் திட்­டத்­தினை வன்­மை­யாக கண்­டிக்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஆத­ரவு 19ஆவது திருத்­தத்­திற்கு கிடைக்காது என எதிர்க்­கட்சி தலை வர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். 

 எதிர்­வரும் 10 ம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் 19 வது திருத்தம் விவா­தத்­திற்கு உப்­ப­டுத்­தக்­கூ­டாது. கட்சி தலை­வர்கள் கூட்­டத்­திலும் அத்­தீர்­மா­னத்­தினை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சி தலைவர் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம் பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற் கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது 19 வது திருத்த சட்­டத்­தினை ஆத­ரிப்­பதில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­டையே முரண்­பா­டுகள் இல்லை. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வ­திலும் சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை நடை முறைப்­ப­டுத்­து­வதில் நாம் முழு­மை­யாக ஆத­ர­வினை வழங்­கு­வ­தற்கு தயார். 

ஆயினும் தற்­போது கொண்டு வரப்­பட்­டுள்ள 19 வது திருத்­தச்­சட்டம் அர­சியல் அமைப்பின் வெளிப்­பா­டு­க­ளுக்கு முர­ணா­னது. 19வது திருத்­தச்­சட்டம் ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வது மட்டும் அல்­லாது சுயா­தீன ஆணைக்­கு­ழு­வினை செயற்­ப­டுத்­து­வதும் தேர்தல் முறை­மையில் மாற்­றத்­தினை கொண்டு வரு­வ­துமேயாகும். ஆனால் ஐக்­கிய தேசி­யக்­கட்சி தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்டு வருவோம் எனக் கூறிக்கொண்டு ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி அதை பிர­த­மரின் அதி­கா­ர­மாக மாற்­றவே முயற்­சிக்­கின்­றனர். 

 19 வது திருத்­தச்­சட்டம் தொடர்பில் உயர் நீதி­மன்­றத்­தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும். இம் முறைமை வர்த்­த­மாணி அறி­வித்­த­லன்றி ஒரு சிலரின் சுய­நல செயற்­பா­டாக அமைந்­துள்­ளது. இதை ஒரு போதும் எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எனவே எதிர்­வரும் 9 ஆம், 10ஆம் திக­தி­களில் பாரா­ளு­மன்­றத்தில் 19 வது திருத்தம் தொடர்­பி­லான விவாதம் இடம் பெறக்­கூ­டாது. 

மாறாக மீண்டும் அர­சியல் அமைப்­பிற்கு அமைய வர்த்­த­மானி அறி­வித்தல் முறை­மை­யாக மேற்­கொள்­ளப்­பட்ட பின்னர் நீதி­மன்ற விசா­ர­ணைக்கு விடப்­பட வேண்டும். எனவே முறை­யான செயற்­பா­டு­களை கையாளும் வரையில் எமது ஆத­ரவு கிடைக்­கப்­போ­வ­தில்லை. அதேபோல் 19 வது திருத்­ததத்தை நிறைவேற்றி அதை நடை­மு­றைப்­ப­டுத்­தாது தேர்தல் முறை­மையில் மாற்­றத்­தினை கொண்டு வந்து இரண்டு திருத்­தங்­க­ளையும் ஒன்­றாக செயற்­ப­டுத்­து­வ­தாயின் நாம் இணக்கம் தெரி­விக்க முடியும். 

இது ஒரு வழி­முறை மட்­டுமே. ஆயினும் தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்டு வரு­வதே இப்­போது முக்­கிய கோரிக்­கை­யாக உள்­ளது எனக்­கு­றிப்­பிட்டார்.
19 ஆவது திருத்தத்திற்கு சு.க. ஆதரவு வழங்காது Reviewed by Author on April 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.