இன்று அதிக மழைபெய்யும்: வானிலை அவதான நிலையம்
நாட்டின் பல பாகங்களில் இன்று மதியம் அல்லது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய, 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கிழக்கு மாகாண கரையோர பிரதேசங்களிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அந்நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கைக்கு மேலான பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டல குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும், நாட்டின் கடற்பிரதேசங்களிலும் மேலதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பமுனுகம, தொலஸ்பாகே, படியப்பல்ல, கொட்டகொட ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் இன்று மதியம் 12.10 மணியளவில் உச்சம்கொடுக்கும் என அந்நிலையம் அறிவித்துள்ளது.
இன்று அதிக மழைபெய்யும்: வானிலை அவதான நிலையம்
Reviewed by NEWMANNAR
on
April 08, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 08, 2015
Rating:


No comments:
Post a Comment