சபையில் சிலருக்கு வயிற்றோட்டமாம்: ரணில்
பங்குச் சந்தை நிதி புரள்வு மோசடிகள் உட்பட பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தவுடன் இன்று ஒரு சிலருக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்து விட்டது என இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பந்துல குணவர்தன எம்.பி. இன்று கிளப்பிய சிறப்புரிமை பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தனது பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக பந்துல குணவர்தன சென்றுள்ளார். அப்படியெனில் அது முடிந்தவுடன் அவர் அங்கிருந்து வெளியேறி இருக்க வேண்டும். அதைவிடுத்து அங்கு வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளருடன் இணைந்து ஏன் வெளியேறினார். அத்தோடு ஏன் அவருடைய வாகனத்தில் ஏறிச் சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
அன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடாத்த நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் பந்துல அவ்விடத்திற்கு சென்றுள்ளார். அவர் தன் பிரச்சினைக்கு நீதிமன்றம் சென்று தெளிவுப்படுத்தி தீர்ப்பை பெற்று கொள்ள முடியும். அது முடியாவிட்டால் பாராளுமன்றத்தில் அதனை ஆராயலாம். விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளதால் பங்குச் சந்தை புரள்வு மற்றும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டோருக்கு இன்று வயிற்றோட்டம் ஆரம்பித்துள்ளது என்றார்.
சபையில் சிலருக்கு வயிற்றோட்டமாம்: ரணில்
Reviewed by Author
on
April 28, 2015
Rating:
Reviewed by Author
on
April 28, 2015
Rating:

No comments:
Post a Comment