மன்னார் ஏ-32 பிரதான வீதியில் மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு-மக்கள் விசனம்.-Photos
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஏ-32 பிரதான வீதியில் மாடுகளின் நடமாட்டம் அதிகாரித்துள்ளமையினால் போக்கு வரத்துச் சேவைகள் பாதீப்படைந்துள்ளதோடு,விபத்துக்கள் ஏற்படும் நிலையும் தோண்றியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்துச் சேவைகள் குறித்த வீதியூடாக இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் குறித்த வீதியில் நாளாந்தம் காலை மற்றும் மாலை நேரங்களில் பல நூற்றுக்கணக்கான மாடுகள் வீதியை இடைமறித்துக்கொண்டு செல்லுகின்றது.
இதனால் போக்குவரத்துக்கள் நீண்ட நேரம் தடைப்படுவதோடு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் வீதிகளின் திரிகின்ற மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அல்லது குறித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக மாந்தை மேற்கு பிரதேச செயலகம்,மாந்தை மேற்கு பிரதேச சபை உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் ஏ-32 பிரதான வீதியில் மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு-மக்கள் விசனம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 19, 2015
Rating:
No comments:
Post a Comment