வடமாகாணத்தை சேர்ந்த 4 ஊடகவியலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(28) கொழும்பு தெமட்டகொடையில் உள்ள குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு விசாரணைக்காக அழைப்பு
வடமாகாணத்தை சேர்ந்த 4 ஊடகவியலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(28) கொழும்பு தெமட்டகொடையில் உள்ள குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா மாட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம்,மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் என்.ஜே.பொலிஸ்டஸ் பச்சேக்,ஏ.ரி.மார்க்,எஸ்.ஆர்.லெம்பேட் ஆகிய நான்கு ஊடகவியலாளர்களுமே விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் கண்காணிப்புக்குழுவாகிய பெவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் றோகண ஹெட்டியாராச்சிக்கு தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் முறையிட்டிருந்தார்.
கொழும்பு குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு செய்த இந்த முறைப்பாட்டையடுத்து கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சொல்லப்படும் தொலை பேசி இலக்கத்தில் இருந்து குறித்த செய்தியாளர்களுக்கும் அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே இந்த செய்தியாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அந்த தொலைபேசியில் இருந்து இவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா? என கொழும்பு குற்ற புலனாய்வுப்பிரிவினரினால் விசாரணை செய்யப்பட்டனர்.
அத்துடன் குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புடையவரை தெரியுமா? என வினவி குறித்த செய்தியாளர்களிடம் இருந்து, வாக்குமூலங்களும் பதிவு செய்து கொண்டனர்.
இந்த விசாரணை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தை சேர்ந்த 4 ஊடகவியலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(28) கொழும்பு தெமட்டகொடையில் உள்ள குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு விசாரணைக்காக அழைப்பு
Reviewed by NEWMANNAR
on
April 28, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 28, 2015
Rating:


No comments:
Post a Comment