திருப்பதி வனப்பகுதியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு : 20 பேர் பலி
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்களை சட்டவிரோதமாக வெட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் 12 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருப்பதியை அன்மித்துள்ள ஈசகுண்டா வனப்பகுதியில், 150இற்கும் மேற்பட்டவர்கள் மரங்களை வெட்டிக்கொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் அவர்களைப் பிடிப்பதற்காக அங்கு சென்றபோது, தொழிலாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 2 காவல்துறையினர் காயமடைந்ததாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் 9 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மீதமிருப்பவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. சம்பவம் நடந்த பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என தகவல் வௌியாகியுள்ளது.
ஆந்திர வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டுபவர்களை ஆந்திரக் காவல்துறை தொடர்ந்து கைதுசெய்து வருகிறது. இதற்கு முன்னும் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் மீது ஆந்திரக் காவல்துறை தூப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தது.
திருப்பதி வனப்பகுதியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு : 20 பேர் பலி
Reviewed by NEWMANNAR
on
April 07, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 07, 2015
Rating:


No comments:
Post a Comment