கொழும்பு துறைமுக கிழக்கு பிராந்திய நுழைவாயில் திறந்து வைப்பு
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பிராந்திய நுழைவாயிலின் முதற்கட்டம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நுழைவாயில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆயிரத்து 200 மீற்றர் நீளம் கொண்ட இந்நுழைவாயில் இதுவரை 400 மீற்றர் தூரம் வரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்ட பணிக்காக 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் சம்பிரதாய பூர்வமாக சீனாவின் சரக்குக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு நுழைவாயிலை அண்மிக்கவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பகுதி இலங்கையின் மிக ஆழமான பகுதி என்பதோடு இதன் ஆழம் 18 மீற்றர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக கிழக்கு பிராந்திய நுழைவாயில் திறந்து வைப்பு
Reviewed by NEWMANNAR
on
April 27, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 27, 2015
Rating:


No comments:
Post a Comment