மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் காண்பிக்கப்பட்ட யேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் காட்சி.-படங்கள்
இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக நேற்று (3) அனுஸ்டித்தனர்.
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் காட்சி நேற்று(3) வெள்ளிக்கிழமை இரவு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் காண்பிக்கப்பட்டது.
புனித வெள்ளி திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனை இடம்பெற்றதுடன் இரவு 8 மணியளவில் திருப்பாடுகளின் காட்சிகள் காண்பிக்கப்பட்டது.
குறித்த சடங்குகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்கியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் காட்சி நேற்று(3) வெள்ளிக்கிழமை இரவு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் காண்பிக்கப்பட்டது.
புனித வெள்ளி திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனை இடம்பெற்றதுடன் இரவு 8 மணியளவில் திருப்பாடுகளின் காட்சிகள் காண்பிக்கப்பட்டது.
குறித்த சடங்குகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்கியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் காண்பிக்கப்பட்ட யேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் காட்சி.-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
April 04, 2015
Rating:

No comments:
Post a Comment