மன்னாரில் சிலோன் டெவலப்மென்ட் பிளான்டேஷன் (CDP) எம்பயர் நிறுவனத்தின் புதிய கிளை கோலாகலமாக திறப்பு!
சிலோன் டெவலப்மென்ட் பிளான்டேஷன் (CDP) எம்பயர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது புதிய கிளையை உத்தியோகபூர்வமாக மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை(21) திறந்து வைத்தது.
இலங்கையின் விவசாயத் துறையை நவீன மயமாக்கவும், விசேட முகாமைத்துவ சேவைகளை வடமாகாணத்தின் இதயப் பகுதிக்குக் கொண்டு செல்லும் வகையில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
-மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம். ஹலிம்தீன்பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.
தொழில்நுட்பம் சார்ந்த விவசாயத் துறையை உருவாக்கும் CDP-இன் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் CDP ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த விழா இடம்பெற்றது.உள்ளூர் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை ஊக்குவிக்கும் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
Reviewed by Vijithan
on
April 21, 2026
Rating:
-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20(CDP)%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!.jpg)

No comments:
Post a Comment