
இவ்வருடம் முதற்காலாண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் 3,240 பேர் எயிட்ஸ் (எச். ஐ. வி) தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான எயிட்ஸ் வேலைத்திட்டத்துக்கான பிரதிநிதி வைத்தியர் தயாநாத் ரணதுங்க தெரிவித்துள்ளார் .
இவ்வாறு எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1,732 பேர் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஏனைய 1,508 பேரும் நாட்டிற்குள் இருந்தபோதும் இதுவரையிலும் இனங்காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் எயிட்ஸ் வேலைத்திட்டத்தின் நோக்கமானது 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் எயிட்ஸினை முற்றாக இல்லாதொழிப்பதாகும்.
அதே போன்று இலங்கையில் எயிட்ஸ் பரவுதல் மற்றும் எயிட்ஸினால் ஏற்படும் மரணம் போன்றவற்றை முற்றாக இல்லா தொழிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment