

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளாக அனோரெக்சியா நெர்வோஸா(anorexia nervosa) எனப்படும் பசியற்ற உளநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ரச்சேல் பாரோக் (Rachel farrokh).வெறும் 40 பவுண்டு மட்டுமே எடையுள்ள இவர் கடந்த 10 ஆண்டுகளாக, ரத்தம் சுண்டிப்போதல், நுரையீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பசியின்மையால் ஏற்படும் உண்ணல் குறைபாடு நோயாலும் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் ‘யூடியூப்’ மூலமாக தனது சிகிச்சை செலவுக்கு நிதி அளித்து உதவிடுமாறு இரக்க மனம் கொண்டவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது பற்றி அவர் கூறுகையில்,எனது கடைசிக் காலம் நெருங்கிவிட்டது என்பது எனக்கு தெரியும்.
எனினும், அனோரெக்சியா நெர்வோஸா எனப்படும் உண்ணல் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு கவனிக்க யாரும் இல்லாமல் என்னைப்போல் கஷ்டப்படும் பலருக்கு உதவி செய்யவே இந்த பிரசாரத்தில் நான் எனது கணவர் ராட் எட்மாண்ட்சன் ஆகியோர் ஈடுபட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதனையேற்று, சிலர் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் டொலர்கள் வரை நிதியுதவி அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment