கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் ஒரே நாளில் 651 பேர் பலி!
ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் அதீத வெயிலின் தாக்கத்தால் இரு மாநிலங்களிலும் ஒரே நாளில் 651 பேர் பலியாகி உள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் கொடுமை அதிகமாக உள்ள நிலையில், அனல் காற்றும் வீசுகிறது.
வெயிலின் கொடுமை தாங்காமல் முதியவர்கள் பலர் புழுவை போல் சுருண்டு விழுந்து பலியாவதோடு, சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ஆந்திராவில் 400 பேரும் தெலுங்கானாவில் 251 பேரும் பலியாகி உள்ளனர்.
ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களிலும் 116 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவானது.
வெயில் காரணமாக மக்கள் வெளியில் நடமாட அஞ்சுகிறார்கள். மக்கள் நடமாட்டம் இல்லாததால் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது.
இரு மாநிலங்களிலும் இன்னும் 2 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என விசாகப்பட்டினம் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
மேலும், பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்களை ஆந்திர அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.
கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் ஒரே நாளில் 651 பேர் பலி!
Reviewed by NEWMANNAR
on
May 24, 2015
Rating:

No comments:
Post a Comment