லேபிளை மாற்றி விற்பனை: சுமார் ஒரு இலட்சம் டின் மீன்கள் பறிமுதல்
சப்புகஸ்கந்த பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து லேபிளை மாற்றி விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு இலட்சம் டின் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 140 இலட்சம் ரூபா பெறுமதியான டின் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
லேபிள் மாற்றப்பட்ட இந்த டின் மீன்களில் ஒருதொகை சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பாணந்துறை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்தும் லேபிள் மாற்றப்பட்ட 42 ஆயிரம் டின் மீன்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
டின் மீன்கள், பறிமுதல், லேபிளை மாற்றி விற்பனை
லேபிளை மாற்றி விற்பனை: சுமார் ஒரு இலட்சம் டின் மீன்கள் பறிமுதல்
Reviewed by NEWMANNAR
on
May 24, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 24, 2015
Rating:


No comments:
Post a Comment