அண்மைய செய்திகள்

recent
-

கம்பன் விழா – 2015 ஆரம்பம்: இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு


கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா – 2015 கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று (01) மாலை ஆரம்பமாகியது.

ஸ்ரீ ஐஸ்வர்யலக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து கம்பன் படம் ஊர்வலமாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது.


கம்பன் விழாவின் பிரதம விருந்தினராக மலேசியாவின் இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் கலந்து சிறப்பித்தார்.

இராமநாடகக் கீர்த்தனை மற்றும் திருவாசக நூல்கள் வெளியிடப்பட்டன.

அத்துடன், 2014 கம்பன் விழா நிகழ்வின் இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகி இரு அமர்வுகளாக நடைபெற்றன.

காலை அமர்வில் தமிழ்நாட்டுப் புலவர் சண்முகவடிவேலின் இலக்கியப் பேருரையும், அதனைத் தொடர்ந்து சுழலும் சொற்போரும் இடம்பெற்றது,

மாலை அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்பித்தார்.

மாலை அமர்வில் அஞ்சலியரங்கும், கற்றோரைப் பெரிதும் கலங்கச்செய்யும் பிரியாவிடை எனும் தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது.

பட்டிமன்றத்திற்கு கம்பவாரிதி இ.ஜெயராஜ் நடுவராகக் கடமையாற்றினார்.

எதிர்வரும் திங்கட்கிழமை வரை இரு அமர்வுகளாக கம்பன் விழா நடைபெறவுள்ளது.
கம்பன் விழா – 2015 ஆரம்பம்: இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு Reviewed by NEWMANNAR on May 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.