இரட்டை வாக்குச்சீட்டை பயன்படுத்துவதற்கான உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்படவேண்டும்
வாக்காளர் ஒவ்வொருவருக்கும் இரட்டை வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். கலப்புத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்ற பொழுது, நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மை சமூகங்களின் கட்சிகளுக்கான உரிய பிரதிநிதித்துவங்களை உறுதி செய்து கொள்வதற்கு பயனுள்ள மாற்றுத் தீர்வாக இதுவே அமையுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளதென அக்கட்சியின் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புதிய தேர்தல் திருத்தம் தொடர்பாக மு.கா.வின் முன்மொழிவை அனுப்பி வைத்த பின்னர் அரசியலமைப்பின் 20 ஆவது சீர்திருத்தம் தொடர்பாக கருத்து தெரி விக்கும் போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த வரை வின் நகலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் அமைச்சரவைக்கு சமர் ப்பித்திருந்தார். அதில் வேறுபாடுகளை களைந்து கொள்வதற்கு இன்னுமொரு முய ற்சியை மேற்கொள்வதாக நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் தங்களது நிலைப்பா ட்டை எழுத்து மூலமாக இன்று நண்பகலு க்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது என்ற இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தோம்.
எங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய ஓர் அறிக்கையை இன்று ஜனாதிபதி செயல கத்திற்கு அனுப்ப இருக்கின்றோம். அதன் பிரகாரம் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் இரட்டை வாக்குச் சீட்டை பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக கலப்புத் தேர்தல் முறைமைஅறிமுகப்படுத்தப்படுகின்ற பொழுது, சிறுபான்மை சமூகங்கள் சிதறி வாழ்கின்றமை யால் அவர்களது ஆசனங்களை உறுதி செய்து கொள்வதற்காக இம்முறை பயனுள்ள மாற்றுத் தீர்வாக அமையுமென நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
வாக்காளர் ஒருவர் தனது தேர்தல் தொகுதிக்கு உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வாக்கோடு சேர்த்து, தாம் விரும்புகின்ற கட்சி ஒன்றுக்கும் வாக்களிப்பது என்ற நிலைப்பாடும், விகிதாசாரத் தேர்தல் முறையில் முழுமையாக கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் உறு ப்பினர்களை தெரிவு செய்வதற்கான ஏற்பா டுகளைச் செய்து, அதன் மூலம் எங்கள் தேசிய விகிதாசாரத்திற்கு அமைவாக எங்க ளுக்கான தேர்தல் தொகுதிகளை எல்லை மீள் நிர்ணயம் செய்கின்ற வாய்ப்பையும் உள்ளடக்க வேண்டுமென்று மிக விபரமாக அறிக்கையைச் சமர்ப்பிக்கின்றோம்.
இது சிறுபான்மைக் கட்சிகளும், சிறிய கட்சிக ளும் பாராளுமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு பெரிதும் உதவுமென்று நாம் நம்புகின்றோம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் பெரிய தேசிய கட்சிகள் மட்டும் தான் நன்மையடையும்.
இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களின் நன்மைக்காகவும், சிறுபான்மை இன சிறிய கட்சிகளின் நலனுக்காகவும் ஒன்றாக அழுத்தத்தைக் கொடுப்பதற்கு முன்வந்திருக்கின்றோம் என்றார்.
இரட்டை வாக்குச்சீட்டை பயன்படுத்துவதற்கான உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்படவேண்டும்
Reviewed by Author
on
May 13, 2015
Rating:

No comments:
Post a Comment