அண்மைய செய்திகள்

recent
-

அடுத்த பாராளுமன்றத்திலேயே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு


எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின்னர் அமைக்­கப்­ப­டு­கின்ற பாரா­ளு­மன்­றத்­தி­லேயே வடக்கு, கிழக்கு பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். மேலும் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின்னர் நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். அதற்­கான வேலைத்­திட்­டங்­களை அடுத்த பாரா­ளு­மன்­றத்தில் முன்­னெ­டுப்போம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார். வடக்கு, கிழக்கு பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமை­ய­வுள்­ளன என்றும் அதற்கு எவ்­வா­றான அணு­கு­மு­றையை அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் என்றும் வின­வி­ய­தற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அமைச்சர் ராஜித சேனா­ரட்ன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில், வடக்கு, கிழக்கு அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் செயற்­பாட்டை நாங்கள் விட்டு விட­வில்லை. அதற்­கான நட­வ­டிக்­கை­கள் அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் முன்­னெ­டுக்­கப்­படும். விரைவில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்தல் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின்னர் அமைக்­கப்­ப­ட­வுள்ள புதிய பாரா­ளு­மன்­றத்­தி­லேயே வடக்கு கிழக்கு பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின்னர் அமைக்­கப்­ப­ட­வுள்ள பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அந்த அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக வடக்கு, கிழக்கு பிரச்­சி­னைக்­கான தீர்வும் உள்­ள­டக்­கப்­படும். புதிய அணு­கு­மு­றையின் ஊடாக வடக்கு,கிழக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண நடவ டிக்கை எடுக்கப்படும். எனவே அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றார்.

அடுத்த பாராளுமன்றத்திலேயே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு Reviewed by Author on May 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.