அண்மைய செய்திகள்

recent
-

இந்தோனேஷிய அகதிகள் படகில் அவலம்: உணவுக்கான சண்டையில் 100பேர் வரை படுகொலை உயிர் தப்பியோர் தகவல்


கடலில் நிர்க்கதியான புகலிடப் படகில் இருப்பவர்களுக்கிடையே எஞ்சிய உணவுக்காக ஏற்பட்ட சண்டையில் 100 பேர் வரை உயிரிழந்ததாக மூழ்கும் படகொன்றில் இருந்து உயிர் தப்பிய சிலர் குறிப்பிட்டுள்ளனர். இந்தோனேஷிய கடற்பகுதியில் மூழ்கும் படகில் இருந்து மீட்கப்பட்ட மூவர், படகில் இருந்த பலரும் கத்தியால் குத்தப்பட்டோ, தூக்கில் தொங்கவிடப் பட்டோ அல்லது கடலில் வீசி எறியப் பட்டோ கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளனர். மியன்மார், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சுமார் 700 புகலிடக் கோரிக்கை யாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷிய அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். இவர்கள் மலேஷியாவில் தரையிறங்க விரும்பிய போதும் மலேஷிய கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களை அழைத்து வந்த ஆட்கடத்தல்காரர்கள் நடுக் கடலில் கைவிட்டுச் சென்ற நிலையில் இந்த படகு கடந்த இரண்டு மாதங்களாக கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கையில் இந்தோ னேஷிய மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களை காப்பாற்றியுள்ளனர். உயிர் தப்பியவர்கள் தற்போது இந்தோ னேஷியாவின் அசே தீவுப் பகுதியில் சேமிப்பு கிடங்கொன்றில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலா னவர்கள் உடல் வறட்சி மற்றும் ஊட்டச் சத்து இன்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் பங்களாதேஷின் பங்காளி இனத்தினருக்கும் மியன்மார் ரொஹிங்கியா இனத்தினருக்கும் இடையிலேயே உணவுக்காக படகில் சண்டை நிகழ்ந்துள்ளது. “சண்டைகள் இடம்பெற்றது உண் மைதான்” என்று 24 வயது ஷ¤ குதாரா என்ற ரொஹிங்கியா இனப் பெண் உறுதி செய்துள்ளார். “அவர்கள் ஆட்களை வெட்டினார்கள். கழுத்தை அறுத்தார்கள்” என்றும் அவர் கூறினார். ரொஹிங்கியாக்களின் உணவை பெறுவதற்கு பங்காளிகள் கத்திகள் மற்றும் சுத்தியல்கள் கொண்டு தாக்கியதாக முஹமது ரபீக் என்பவர் குறிப்பிட்டுள்ளார். ரொஹிங்கியாக்கள் தம்மிடம் இருக்கும் உணவை பகிர்ந்துகொள்வதை மறுத்ததாகவும் ரபீக் குற்றம்சாட்டினார். இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கூறும் தகவல்களில் உள்ள உண்மைத் தன்மை பற்றி உறுதிசெய்ய முடியவில்லை. எனினும் அவர்களின் கதைகள் ஏனைய ஊடகச் செய்திகளுடன் பொருந்திப் போவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தோனேஷிய அகதிகள் படகில் அவலம்: உணவுக்கான சண்டையில் 100பேர் வரை படுகொலை உயிர் தப்பியோர் தகவல் Reviewed by Author on May 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.