அண்மைய செய்திகள்

recent
-

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கான வாக்​குப் ​பதிவு நிறைவடைந்துள்ளது. 


இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது. 

மாலை 6.00 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தால் இரவு 8.00 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

மாலை 5.00 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதிகபட்சமாக கரூரில் 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தலைநகர் சென்னையில் மாலை 5.00 மணி நிலவரப்படி 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 87.12% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 72.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

இதன்படி தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை 4 கோடியே 71 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

கடந்த வருடத்தில் மாலை 5.00 மணியளவில் 4 கோடி பேர் வாக்களித்திருந்த நிலையில் இம்முறை அதனை விட 70 லட்சம் வாக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளன.





தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு Reviewed by Vijithan on April 23, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.