
வடக்கில் புலிக்கொடி மீண்டும் ஏற்றப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த 19ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
இனங்களுக்கிடையே எதிர்ப்பு மற்றும் பொது மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கின்றார் என குற்றவியல் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
ஏற்கனவே இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை கொடி விவகாரம் தொடர்பில் முன்னாள் இராணுவ அதிகாரி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் புலி கொடி தொடர்பில் அவ்வாறான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என சட்டத்துறைகளில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய அவ்வாறு புலிக்கொடிகள் வடக்கில் காணப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment