
பிரியங்கா சவுத்திரி ரெய்னாவுடனான முதல் சந்திப்பு முதல் திருமணம் நடந்தது வரையிலான பல விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, கடந்த ஏப்ரல் மாதம் தனது சிறுவயது தோழியான பிரியங்கா சவுதிரியை மணந்துக் கொண்டார்.
இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும். எனினும் இவர்களது உறவில் காதல் வழிந்தோடுகிறது.
இந்நிலையில் ரெய்னா பற்றி அவரது மனைவி பிரியங்கா சவுத்தி ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
ரெய்னாவுடனான முதல் சந்திப்பு பற்றி அவர் கூறுகையில், சுரேஷ் ரெய்னாவும், நானும் பால்ய நண்பர்கள். இருவரும் பள்ளி பருவம் வரை நண்பர்களாக பழகினோம். அதன் பின்னர் நாங்கள் வேறு நகரத்திற்கு குடியேறிவிட்டோம்.
இதற்கிடையில் நான் பி.டெக். பயின்றேன். எனக்கு நெதர்லாந்தில் செயல்பட்டு வரும் பிரபல வங்கியில் வேலை கிடைத்தது.
இதற்காக நெதர்லாந்து செல்லும் போது, ரெய்னாவை தற்செயலாக விமான நிலையத்தில் சந்தித்தேன்.
ரெய்னா அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி கொண்டிருந்தார். ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.
நீங்கள் ரெய்னாவின் ரசிகையா என்ற கேள்விக்கு, கிரிக்கெட்டை விட கால்பந்து விளையாட்டில் தான் எனக்கு ஈடுபாடு அதிகம். குறிப்பாக லயோனல் மெஸ்ஸி, ராபின் வான் பெர்சி போன்றோரின் தீவிர ரசிகை நான்.
இருப்பினும் கிரிக்கெட் வீரர் என்பதை விட, கணவர் என்ற உறவில் ரெய்னாவை ரசிக்கிறேன். ஆனால் இனியும் இப்படி இருக்க போவதில்லை. கிரிக்கெட் விளையாட்டினை ரசிக்க கற்றுக்கொள்ள போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரெய்னாவின் அம்மா தான் எங்களது திருமண ஆட்டத்தை ‘மேட்ச் பிக்சிங்’ செய்தார். இதில் எங்களின் ஆட்டத்தை விட பெற்றோரின் ஆட்டமே அதிரடியாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
தேனிலவு கொண்டாட்டம் பற்றி கூறுகையில், ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் நாங்கள் இருவரும் தேனிலவு கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இதற்காக இத்தாலியில் உள்ள மிலன் நகருக்கு செல்ல இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment