6 விக்கெட்டுக்களால் டெல்லிக்கு வெற்றி
சென்னையை 6 விக்கெட்டுக்களால் டெல்லி அணி வெற்றி கொண்டுள்ளது. சென்னை லீக் சுற்றில் எதிர்கொள்ளும் ஐந்தாவது தோல்வி இதுவாகும். சென்னை, டெல்லி அணிகளுக்கு இடையில் ஐ.பி.எல். தொடரின் 49ஆவது லீக் போட்டி நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்ததால் சென்னையின் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை எடுக்க தடுமாறியதுடன் 20ஓவர்கள் நிறைவில் 6விக்கெட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. டு பிளஸிஸ் மட்டும் அதிகபட்சமாக 29ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் டெல்லியின் சாஹீர் கான் 9ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் 120 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் சென்னை அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினார். அய்யருடன் இணைந்த யுவராஜ் சிங்கும் சிறப்பாக விளையாடினார். யுவராஜ் சிங் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அய்யர் 49 பந்தில் 70 ஓட்டங்களைக் குவித்து இறுதிவரையில் ஆட்டமிழக்காது டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டியின் ஆட்டநாயகனாக சாஹீர் கான் தெரிவானார்.
6 விக்கெட்டுக்களால் டெல்லிக்கு வெற்றி
Reviewed by Author
on
May 13, 2015
Rating:
Reviewed by Author
on
May 13, 2015
Rating:


No comments:
Post a Comment