மன்னார் மாவட்டத்தில் இருந்து முதன் முறையாக சர்வதேச ஒலிம்பிக் செயலமர்விற்கு கீறிஸ் ஒலிமபிக்சதுக்கம் செல்லும் மரியான் அன்ரனிஸ் 23-05-2015 பயணம்-Photos
ஆரம்பக்கல்வியினை மன்.புனித.சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி 4ம் வருடத்தில் கல்வி பயில்கின்ற ம.அன்ரனிஸ் அவர்கள் 2014-12-07தொடக்கம் 12-10-2014 வரை பண்டார வளையில் நடைபெற்ற தேசிய ஒலிம்பிக்செயலமர்வில் யாழ்பல்கலைக்கழகத்தின் சார்பில் பங்கு பற்றி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி திறமைக்கு சான்றாக 23-05-2015 தொடக்கம் 06-06-2015வரை கீறிஸ் ஒலிம்பிக்சதுக்கத்தில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக்செயலமர்விற்கு தெரிவுசெய்யப்பட்ட இருவரில் ஒருவராகவும் தமிழராகவும் அதுவும் எமது மன்னார் மண்ணின் பெருமை பேசும் மைந்தன் மரியான் அன்ரனிஸ் அவர்களை மன்னார் மக்களோடு மன்னார் இணையமும் வாழ்த்தி பாராட்டி பெருமையடைகின்றது.
பெயர்-மரியான் அன்ரனிஸ்
கற்ற கல்லூரி- மன்.புனித.சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி
பயிலும் பல்கலைக்கழகம்- யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முகாமைத்துவம் 4ம் வருடம்
பல்கலைக்கழகத்தில்
சிறந்த புதுமுக மாணவர்களுக்கான கரம்-பட்மின்டன் விளையாட்டு விருது
தொடர்ச்சியாக 3வருடங்கள் வர்ணஇரவு விருது
ஏனையவை
தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தால் தேசிய ரீதியில் இடம் பெற்ற கரம் போட்டியில் மூன்றாம் இடம்
2008 19 வயதிற்குட்பட்ட பட்மின்ரன் குழு சம்பியன் வடமாகாணம்
2008 19 வயதிற்குட்பட்ட கரம் போட்டியில் 2ம் இடம் வடமாகாணம்
மாவட்ட ரீதியில் 1ம் நிலை வீரர் பட்மின்ரன்
இப்படியாக இளம் பராயத்தில் இருந்தே விளையாட்டிலும் படிப்பிலும் ஆர்வம் காட்டிவரும் ம.அன்ரனிஸ் அவர்கள் இன்னும் பல சாதனைகள் புரிந்து தனக்கும் தனது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கவேண்டும் என வேண்டுவதோடு பயணம் சிறப்பாக அமையவேண்டி பிராத்திக்கின்றோம் தொடரட்டும் கல்வியும் விளையாட்டும்…அன்னார் மண்ணின் மைந்தன் ம.அன்ரனிஸ் உடன் கிறீஸ் பயணிக்கும் சகோதரமொழிச்சகோதரி செல்வி இமாசா அவர்களையும் மன்னார் இணையம் வாழ்த்தி நிற்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் இருந்து முதன் முறையாக சர்வதேச ஒலிம்பிக் செயலமர்விற்கு கீறிஸ் ஒலிமபிக்சதுக்கம் செல்லும் மரியான் அன்ரனிஸ் 23-05-2015 பயணம்-Photos
Reviewed by NEWMANNAR
on
May 23, 2015
Rating:

No comments:
Post a Comment