
கத்தார் தோஹா விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் (18 வயதுக்குட்பட்டவர்களுக்கானது) போட்டிகளில் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர்கள் ஒரு தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 1 நிமிடம் 27 செக்கன்களில் நிறைவு செய்த எம். யமனி துலாஞ்சலி (அம்பகமுவ ம.ம.வி.இ உடபுலத்கம) இலங்கைக்கான ஒரே ஒரு தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக்கொடுத்தார்.
42 நாடுகளைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மெய்வல்லுநர்கள் கலந்துகொண்ட இப் போட்டியில் 15 தங்கம்இ 11 வெள்ளிஇ 5 வெண்கலப் பதக்கங்களுடன் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
அத்துடன் 27 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வென்றிருந்தனர்.
ஆண்களுக்கான உயரம் பாய்தலில் கடும் போட்டி நிலவியதுடன் டிங் ஷுவோ (சீனா)இ ரொஷான் தம்மிக்க ரணதுங்க கொடக்காவெல குலரத்ன ம.ம.வி. இலங்கை) ஹசன் அல் இப்றாஹிம் (ஈராக்)இ தேஜாஸ்வின் ஷன்கர் (இந்தியா) ஆகிய நால்வரும் 2.12 மீற்றர் உயரத்தை தாவினர். எனினும் 2.15 மீற்றர் உயரத்தை ஷுவோ தாவியதுடன் ரணதுங்க அவ்வுயரத்தை நூலிழையில் தவறவி ட வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் சமல் குமாரசிறி (மீரிகம தேசிய பாடசாலை) 15.39 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 52.88 செக்கன்களில் நிறைவு செய்த எம். எஸ். ராஜபக் ஷ (கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இந்த நால்வரும் உலக கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தராதர மட்டங்களை எட்டியுள்ளமை விசேட அம்சமாகும்.
No comments:
Post a Comment