ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சங்கக்காராவை ஓரங்கட்டிய ஸ்டீவன் சுமித்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ஒரு ஓட்டத்தில் இரட்டை சதத்தை தவறவிட்ட ஸ்டீவன் சுமித் 913 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
இவருக்கு அடுத்து இலங்கை வீரர் சங்கக்காரா 909 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸ் 908 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு பின்தங்கினார்.
அம்லா,மேத்யூஸ்,யூனிஸ் கான், ஜோ ரூட், வில்லியம்சன், மிஷ்பா உல் ஹக், டேவிட் வார்னர் ஆகியோர் முதல் 10 பேர் பட்டியலுக்குள் வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி 11வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் 905 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஆண்டர்சன், பவுல்ட், ஹரீஸ் ஆகியவர்கள் 2 முதல் 4 இடங்களை பிடித்துள்ளனர்.
இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ஹேராத் 5வது இடத்தை பிடித்துள்ளார். ஜான்சன், பிராட், பில்லாந்தர், மார்கல், சவுத்தி 6 முதல் 10 இடங்களில் உள்ளனர். அஸ்வினுக்கு 12வது இடமே கிடைத்துள்ளது.
துடுப்பாட்ட வரிசையிலும், பந்துவீச்சு வரிசையிலும் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சங்கக்காராவை ஓரங்கட்டிய ஸ்டீவன் சுமித்
Reviewed by Author
on
June 15, 2015
Rating:
Reviewed by Author
on
June 15, 2015
Rating:

No comments:
Post a Comment