சிறுவனை தாக்கிய பந்து: கால்பந்தை பரிசளித்து சமாதானப்படுத்திய நெய்மர்

ரசிகர்களை நோக்கி நெய்மர் அடித்த பந்து கூட்டத்தில் இருந்த சிறுவனை தாக்கியதையடுத்து அந்த சிறுவனுக்கு கால்பந்தை கொடுத்து அவர் ஆறுதல் கூறியுள்ளார்.
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிகள் நடந்து சிலி நாட்டில் நடந்து வருகிறது.
இதில் பெரு நாட்டிற்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பதற்காக பிரேசில் வீரர்களை ஏற்றிக் கொண்டு செல்ல பஸ் வீரர்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கு வந்தது.
இதனையடுத்து அந்த ஹொட்டலில் ரசிகர்களும் கூடினர்.பஸ்ஸில் ஏறும் போது நெய்மர் ரசிகர்ளின் கூட்டத்தை நோக்கி பந்தை அடித்தார்.
அது ஒரு சிறுவனை தாக்கியது. இதனையடுத்து அந்த சிறுவன் வலியால் அழுக ஆரம்பித்தான்.
இதனையறிந்த நெய்மர் அந்த சிறுவனை பஸ்ஸின் உள்ளே அழைத்துச் சென்று தனது கையப்பமிட்ட பந்தை பரிசளித்து சமாதானப்படுத்தினார்.
சிறுவனை தாக்கிய பந்து: கால்பந்தை பரிசளித்து சமாதானப்படுத்திய நெய்மர்
Reviewed by Author
on
June 15, 2015
Rating:

No comments:
Post a Comment