102 வயதில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்திய மூதாட்டி!
கர்நாடக மாநிலத்தில் 102 வயதான மூதாட்டி ஒருவர் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கர்நாடகாவில் 2 கட்டமாக நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.
இதில் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் வட்டத்தைச் சேர்ந்த தொட்டாலத்தூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு கவுதம்மா என்ற 102 வயது பெண்மணி போட்டியிட்டுள்ளார்.
அவர் கிராம பஞ்சாயத்து தேர்தலில் 354 வாக்குகள் பெற்று 136 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் கர்நாடகத்தில் 100 வயதை கடந்தவர் முதல் முறையாக கிராம பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கவுதம்மா கூறுகையில், என்னுடைய கிராமத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டேன்.
முதல் முயற்சியிலே வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் இந்த வெற்றியை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
குடிநீர், சாலை, கழிப்பறை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத எனது கிராமத்துக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேர்தலில் போட்டியிட்டேன்.
என் மீது நம்பிக்கை வைத்து வெற்றிபெறச் செய்த தொட்டாலத்தூர் கிராம மக்களுக்காக உயிருள்ளவரை சேவை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே 102 வயதான மூதாட்டி ஒருவர் கிராம பஞ்சாயத்து உறுப்பினராக தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
102 வயதில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்திய மூதாட்டி!
Reviewed by Author
on
June 09, 2015
Rating:

No comments:
Post a Comment