குட்டி நாயகர்களை சந்தித்த டோனி: வைரலாகும் புகைப்படம்
தேசிய விருது வென்ற “காக்கா முட்டை” படத்தில் நடித்த சிறுவர்கள், இந்திய அணித்தலைவர் டோனியை மும்பையில் சந்தித்து பேசியுள்ளனர்.
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்ட இந்த படமானது நல்ல வரவேற்றை பெற்றுள்ளது. பல்வேறு விருதுகளையும், 2 தேசிய விருதுகளையும் வென்றுள்ளது.
இந்தப் படத்தை நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். இதை மணிகண்டன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் 'காக்கா முட்டை' சிறுவர்களை இந்திய அணித்தலைவர் டோனி சந்தித்தார் என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளனர்.
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் சிறுவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று இந்த ஏற்பாட்டை செய்ததாக இயக்குனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இதற்காக மும்பை சென்ற சிறுவர்கள் டோனியை சந்தித்து பேசியுள்ளனர். மேலும், புகைப்படங்கள், ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளனர்
அந்த படத்தின் சில காட்சிகளையும், படத்தின் ட்ரெய்லரையும் டோனி பார்த்து ரசித்ததாக இயக்குனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
குட்டி நாயகர்களை சந்தித்த டோனி: வைரலாகும் புகைப்படம்
Reviewed by Author
on
June 09, 2015
Rating:

No comments:
Post a Comment