அண்மைய செய்திகள்

recent
-

பில்லி சூனியத்தால் பாதிக்கப்படுவர்களுக்கு கைகொடுக்கும் தேவி!








இந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் காமாக்கியா கோவில் (Kamakhya Temple) அமைந்துள்ளது.

அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் நீலாச்சல் என்ற மலை அமைந்திருக்கிறது. அங்கு காமாக்கியா என்ற இந்துக் கடவுளின் கோவில் உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் உள்ள இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

இங்குள்ள பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன.

இக்கோவிலின் வெளித்தோற்றத்தைப் பார்த்தால் மட்டுமே கோவில் போல தோன்றும். உள்ளே சென்றால் இருண்ட பாதாள குகை போன்று இருக்கும்.

இந்தியாவின் சிறந்த கோவில்களில் ஒன்றாக கருதப்படும் காமாக்கியா கோவில், பத்தாம் நூற்றாண்டில் அஸ்ஸாம் மன்னர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதுள்ள கோயிலை கூச் பீகாரின் அரசர் நர நாராயணா என்பவர் கி.பி.1565 ல் மீண்டும் கட்டினார். இது 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

குகை போன்று இருக்கும் இந்த கோவிலின் சிறப்பே சிறு விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவின் யோனி பீடத்தை தரிசிப்பதே.



இந்த கோவிலின் கருவறைவில் மலைப் போன்ற ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மேடைய சுற்றி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியில் யோனிபீடம் அமைந்துள்ளது.

அங்குள்ள பூஜாரி பக்தர்களின் கையைப் பிடித்து பீடத்தின் மீது வைத்து தேவியை வணங்கச் சொல்கிறார். கருவறையிலேயே உயிர்ப்பலி கொடுக்கின்றனர். பலி கொடுத்த ஆடு, கோழி போன்றவற்றின் தலைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், வசதிகள் பல இருந்தும் நிம்மதியற்றுத் தவிப்போர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்துவழிபட்டு நலம் பெறுகின்றனர்.





வசந்த காலத்தின்போது ஆண்டுக்கு மூன்று நாட்கள் இவ்வாலயம் மூடப்படுகிறது. அதற்கு காரணம் அந்த நாட்கள் தேவி விலக்காகி இருக்கும் நாட்களாக கருதப்படுகிறது.

இந்த நாட்களில் தேவி பீடத்திலிருந்து இயற்கையாக வரும் நீருற்று செந்நிறத்தில் வருவது அதிசயமான நிகழ்வாக இருக்கிறது. இந்த மூன்று நாட்களில் பக்தர்களுக்கு ஆலயம் செல்ல அனுமதி இல்லை. ஆனால் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யோகிகள் ஒன்றுகூடி வழிபாடு செய்கிறார்கள். இதனால் அவர்களின் சக்தி அதிகரிக்கிறதாம்.

இந்த கோவிலின் வரலாறும் சிறப்பானதாக இருக்கிறது. தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்டா சதிதேவி. இதனால் அவர் நெருப்பில் விழுந்து உயிர் துறக்க, இறந்த மனைவியின் உடலை சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான். இதன் காரணமாக உலகெங்கும் இருள் சூழ்ந்து அழியும் நிலையை எட்டியது.

இதனை தடுக்க தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். விஷ்ணு பகவான் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக அறுத்து பூமியில் வீழ்த்தினார்.

அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. சதிதேவியின் யோனிப்பகுதி விழுந்த இடமாக காமாக்யா 51 சக்தி பீடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

பில்லி சூனியத்தால் பாதிக்கப்படுவர்களுக்கு கைகொடுக்கும் தேவி! Reviewed by Author on June 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.