மன்னார் மாவட்டத்தில் இம்முறை 900 ஏக்கரில் சிறு போக நெற்செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை.-Photos
மன்னார் மாவட்டத்தில் இம்முறை 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதி கூடிய ஏக்கரில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பி.தேவரத்தினம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்கனவே கால போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நிலையில் தற்போது சிறு போக நெற்செய்கையில் மன்னார் மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள 12 கமநல சேவைகள் நிலையங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் விவசாயிகள் சுமார் 900 ஏக்கரில் சிறு போக செற்செய்கையினை மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட கமநல சேவை திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
தற்போது விவசாயிகள் தமது வயல் நிலங்களை உழுது பண்படுத்தி அனை கட்டி வருகின்றனர்.
இன்னும் சில தினங்களில் நெற்பயிர் விதைப்பு செய்யப்படவுள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இம்முறை 900 ஏக்கரில் சிறு போக நெற்செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 10, 2015
Rating:
No comments:
Post a Comment