அண்மைய செய்திகள்

recent
-

சொந்த மண்ணில் இலங்கை அணி மண்ணை கவ்வும்: வெற்றி வெறியில் மிஸ்பா


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் வருகின்ற 17ம் திகதி தொடங்குகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா இந்த தொடர் குறித்து நிரூபர்களிடம் கூறுகையில், இலங்கையை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது கடினமான விடயம் ஆகும்.

இலங்கை அணி வலுவான அணியாக இருக்கிறது. நாங்கள் ஏற்கனவே இரண்டு தொடர்களை இழந்துள்ளோம். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்துவோம்.

மேலும், சயீட் அஜ்மலின் முறையற்ற பந்துவீச்சு காரணமாக அவர் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. உலக தரமான பந்துவீச்சாளர் அணியில் இல்லாதது எங்களுக்கு இழப்பு தான்.

தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

சொந்த மண்ணில் இலங்கை அணி மண்ணை கவ்வும்: வெற்றி வெறியில் மிஸ்பா Reviewed by Author on June 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.