அண்மைய செய்திகள்

recent
-

நல்லதை தொடர்ந்து செய்வோம் எதையும் மறக்கமாட்டேன் : பிளேட்டர்


"எல்­லோ­ரையும் மன்­னித்­து­விட்டேன். ஆனால் எதையும் மறக்­க­மாட்டேன்' என்று 5-ஆவது முறை­யாக சர்­வ­தேச கால்­பந்து அமைப்பின் (பிபா) தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட செப் பிளேட்டர் கூறி­யுள்ளார். பிபா அமைப்பில் ஊழல்இலஞ்சம் உள்­ளிட்ட பல்­வேறு முறை­கே­டு­களில் அதன் இரண்டு துணைத் தலை­வர்கள் உட்­பட 7 பேர் கைது செய்­யப்­பட்­டனர். ஊழல் மலிந்­து­விட்­டதால் பிளேட்டர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்­தது. இந்த சூழ்­நி­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அன்று காலையில் பிபா கூட்டம் நடந்­து­கொண்­டி­ருந்த ஹோட்­ட­லுக்கு வெடி­குண்டு மிரட்டல் விடுக்­கப்­பட்­டதால் தலைவர் பத­விக்­கான தேர்தல் தாம­த­மாகத் தொடங்­கி­யது. பின்னர் நடந்த வாக்கு எண்­ணிக்­கையில் முதல் சுற்றின் முடிவில், வெற்­றிக்கு தேவை­யான 140 வாக்­கு­களில் பிளேட்டர் 133 வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தார். ஜோர்டான் இள­வ­ரசர் அல் ஹூசைன் 73 வாக்­கு­களை பெற்­றி­ருந்தார். தொடர்ந்து இரண்­டா­வது சுற்று வாக்கு எண்­ணிக்கை தொடங்க இருந்த நேரத்தில் திடீ­ரென போட்­டி­யி­லி­ருந்து தான் வில­கு­வ­தா­கவும், தனக்கு ஆத­ர­வ­ளித்­த­வர்­க­ளுக்கு நன்றி தெரி­விப்­ப­தா­கவும் பிளேட்­டரை எதிர்த்து போட்­டி­யிட்ட ஜோர்டான் இள­வ­ரசர் அலி பின் அல் ஹூசைன் அறி­வித்தார். இதனால் 79 வய­தான செப் பிளேட்டர் மீண்டும் தலை­வ­ராக தேர்­வானார். 209 நாடு­களின் உறுப்­பி­னர்கள் செலுத்­திய வாக்­கு­களில் பிளேட்­ட­ருக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆத­ரவு கிடைத்­தது. இதில் ஐரோப்­பாவின் 53 வாக்­குகள் இள­வ­ரசர் அல் ஹூசை­னுக்கு கிடைத்­தன. ஐரோப்­பா தவிர அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­களும் அல் ஹூசை­னுக்கு வாக்­க­ளித்­தன. ஆனால் அதிக வாக்­கு­களை கொண்ட ஆசியா மற்றும் ஆப்­பி­ரிக்கா கண்­டங்­களை சேர்ந்த உறுப்­பி­னர்கள் பிளேட்­டரை மீண்டும் தலை­வ­ராக தேர்ந்­தெ­டுத்­தனர். வெற்­றிக்குப் பின்னர் பிளேட்டர் பேசும்­போது, "என் மீதான குற்­றச்­சாட்­டுகள் எனக்கு அதிர்ச்சி அளித்­தன. பிபா தலைவர் என்ற முறையில் இன்­னொரு அமைப்பில் என்ன நடக்­கி­றது என்று உறு­தி­யாக தெரி­யாத போது என்னால் கருத்து சொல்ல இய­லாது. நான் சிறந்­தவன் இல்லை எனில் யாருமே சிறந்­தவர் கிடை­யாது. நல்­லதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்' என்றார்.தான் பதவி விலக வேண்டும் என்று வலி­யு­றுத்­திய ஐரோப்­பிய யூனியன் கால்­பந்து அமைப்பின் தலைவர் மைக்கேல் பிளாட்­டி­னியை மன்­னிப்­பீர்­களா? என்ற கேள்­விக்கு "எல்­லோ­ரையும் நான் மன்­னித்­து­விட்டேன். ஆனால் எதையும் நான் மறக்­க­மாட்டேன்' என்றார் பிளேட்டர். ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புடின் தேர்தல் முடிவு குறித்து கூறு­கையில், "பிளேட்டர் மீண்டும் தலைவர் ஆவதை தடுக்கும் முயற்­சிகள் தகர்க்­கப்­பட்­டுள்­ளன. 2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்த எங்கள் நாட்­டுக்கு வாய்ப்­ப­ளித்­த­தற்­காக பிளேட்­ட­ருக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தினர் என்றார்.
நல்லதை தொடர்ந்து செய்வோம் எதையும் மறக்கமாட்டேன் : பிளேட்டர் Reviewed by Author on June 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.