அண்மைய செய்திகள்

recent
-

தப்பினர் சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள்


பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாபி மைதா­னத்­திற்குள் பாகிஸ்தான் -சிம்­பாப்வே அணிகள் மோதிய போட்­டியின் போது, வெடி­குண்­டு­களை கட்­டிக்­கொண்டு நுழைய முயன்­றவர் பொலி­ஸாரால் தடுத்து நிறுத்­தப்­பட்டார். எனினும் அவர் வெடி­குண்­டு­களை வெடிக்க செய்­ததால் 2 பேர் உயி­ரி­ழந்­தனர். சிம்­பாப்வே கிரிக்கெட் அணி தற்­போது பாகிஸ்­தானில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு வரு­கி­றது. நேற்று லாகூரில் உள்ள கடாபி மைதா­னத்தில் பாகிஸ்தான்- சிம்­பாப்வே அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­தது. இந்த பக­லி­ரவு போட்­டியை காண 20 ஆயிரம் ரசி­கர்கள் திரண்­டி­ருந்­தனர். இரவு 9 மணி­ய­ளவில் போட்டி நடந்து கொண்­டி­ருக்கும் போது, கல்மா சவுக் பகு­தியில் இருந்து மைதா­னத்­திற்குள் நுழைய முயன்ற ஒரு­வரை பொலிஸார் நிறுத்தி சோத­னை­யிட்­டனர். அப்­போது அந்த நபர் தனது உடலில் கட்­டி­யி­ருந்த வெடி­குண்­டு­களை வெடிக்க செய்­ததில்இ அந்த நபரும் சோத­னை­யிட்ட பொலிஸ் அதி­கா­ரியும் சம்­பவ இடத்­தி­லேயே உடல் சிதறி உயி­ரி­ழந்­தனர். இந்த மனித வெடி­குண்டு தாக்குதலால் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்படவில்லை. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
தப்பினர் சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் Reviewed by Author on June 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.