மன்னார் இலுப்பைக் கடவை பிரதான வீதியில் விபத்து-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி.
மன்னார் இலுப்பைக் கடவை பிரதான வீதியில் நேற்று(2) வியாழக்கிழமை மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
வானும் முச்சக்கர வண்டியும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை ஒன்று மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களின் சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
-யாழ்ப்பாணம் வைத்தியசாலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்,தந்தை மகள் மற்றும் மகளின் பிள்ளை ஆகியோர் முச்சக்கர வண்டியில் மடு திருத்தலத்திற்கு ஆடித் திருவிழவிற்கு வருகை தந்து விட்டு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது குறித்த வீதியூடாக மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்த வானும் மோதியதிலே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இலுப்பக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் இலுப்பைக் கடவை பிரதான வீதியில் விபத்து-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி.
Reviewed by NEWMANNAR
on
July 03, 2015
Rating:

No comments:
Post a Comment