அண்மைய செய்திகள்

recent
-

61 தேர்தல் வன்முறைகள் குறித்து முறைப்பாடு


தேர்தல் திகதி அறி­விக்­கப்­பட்­டதன் பின்னர் 61 தேர்தல் வன்­மு­றைச்சம்பவங்கள் குறித்த முறை ப்பாடுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அவற்றில் 80 வீத­மா­னவை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்று டிரான்ஸ்­பே­ரன்ஸி இன்டர் நெஷனல் அமைப்பின் தேர்தல் கண்­காணிப்பு நிலை­யத்தின் ஒருங்­கிணைப்­பாளர் சான் விஜே­துங்க தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்சி, சுதந்­திர கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ் தேசியக் கூட்­மைப்பு ஆகிய கட்­சிகள் அரச சொத்­துக்­களை தேர்தல் செய­ற்­பா­டு­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நேற்று வெள்ளிகி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், தேர்தல் காலங்­களில் பொது வளங்­களை பாது­காப்­ப­தற்­காக நிறு­வப்­பட்­டுள்ள டிரான்­பே­ரன்ஸிஸ் இன்­டர்­நெ­ஷனல் நிறு­வ­னத்தின் கண்­காணிப்பின் போது 61 தேர்தல் சட்ட மீறல் செயற்­பா­டுகள் தொடர்பில் முறைப்­பாடுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இம் முறைப்­பா­டு­களில் 80 வீத­மான முறை­ப்பா­டுகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் இது தொடர்பில் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கு முறை­ப்பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான தேர்தல் முறை­ப்பாடுகள் கிடைக்­கப்­பெறும் பட்­சத்தில் முழு­மை­யான தக­வல்­க­ளுடன் டிரான்ஸ்பெ­ரன்ஸி இன்டர்நெஷனல் நிறு­வ­னத்­திற்கு முறைப்­பாடு செய்ய பொது மக்­க­ளுக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அது தொடர்­பி­லான அறி­வி­த்தல்கள் நாளே­டுகள் மூலம் அறி­விக்­கப்­படும்.

நிறு­வ­னத்­திற்கு கிடைக்­கப்­பெற்றுள்ள முறை­ப்பா­டு­களின் அடிப்­ப­டையில் ஐக்­கிய தேசிய கட்சி,சுதந்­திர கட்சி,ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு,மக்கள் விடு­தலை முன்­னணி,தமிழ் தேசிய கூட்ட­மைப்பு ஆகிய கட்­சிகள் தேர்தல் சட்டங்­களை மீறி­யுள்­ள­மைக்­கான தேர்தல் புகைப்­பட மற்றும் காணொளி ஆதா­ரங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அதன் பிர­காரம் நல்­லாட்­சிக்­கான ஐக்­கிய தேசிய முன்­னணி அலரி மாளி­கையில் ஒப்பந்தம் கைச்­சாத்­திட்­டமை, சமுர்த்தி மற்றும் வீட­மைப்பு திட்ட அமைச்சின் ஊட­கச்­செ­ய­லாள­ருக்கு வீடு வழங்­கப்­பட்­டுள்­ளமை, வடமேல் மாகாண முத­ல­மைச்­சரின் காரி­யா­லய தொலை­பேசி வாயி­லாக தேர்தல் பிர­சாரம் செய்­யப்­ப­டு­கின்­றமை, முன்­னா­ள் அமைச்சர் தொண்­டமான் அரச வாக­னங்­களை தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாவித்­துள்­ளமை, அரச பஸ்­களில் வேட்­பா­ளர்­களின் போஸ்­டர்கள் ஒட்­டப்­ப­டு­கின்­றமை போன்ற குற்­றச்­சாட்­டுகள் எமது கண்­கா­ணிப்பு நிலை­யத்­துக்கு பதி­வா­கி­யுள்­ளது.

எவ்­வா­றா­யினும் கடந்த காலங்­களை விடவும் பொலி­ஸாரின் சிறந்த பாது­காப்பு செயற்­பா­டு­களின் கார­ண­மாக இம்­முறை தேர்தல் வன்­மு­றைகள் ஓர­ளவு கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அதே­வேளை,தேர்­தலின் போது கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகளில் ஈடு­படும் அரச ஊழி­யர்­க­ளுக்கு பாதிப்­புக்கள் ஏதும் ஏற்­படும் பட்­சத்தில் அவர்­களால் வழக்கு தாக்கல் செய்­யப்­படும் போது அவர்­க­ளுக்­காக டிரான்­பே­ரன்ஸி நிறு­வ­னத்தின் வழ க்­க­றி­ஞர்கள் முன்­னி­றுத்­தப்­ப­டு­வ­துடன் இல­வச சேவை­யும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும்.
61 தேர்தல் வன்முறைகள் குறித்து முறைப்பாடு Reviewed by Author on July 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.