புளூட்டோ கிரகத்தின் அதி துல்லியமான புகைப்படங்கள்

புளூட்டோ கிரகத்தைக் கடந்துசென்றுள்ள 'நியூ ஹொரிஸன்' விண்கலமானது அக்கிரகத்திலுள்ள 11,000 அடி உயரமான பாரிய மலைப் பிராந்தியத்தை துல்லியமாக புகைப்படமெடுத்துள்ளது.
மேற்படி புகைப்படங்கள் புளூட்டோ கிரகம் தொடர்பில் இதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை விடவும் 10 மடங்கு துல்லியமானதாகும்.
'நியூ ஹொரிஸன்' விண்கலம் அந்தக் கிரகத்துக்கு 12,500 கிலோமீற்றர் தொலைவில் பறந்து இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புளூட்டோவின் சந்திரன்களான சரொன் மற்றும் ஹைட்ரா ஆகியவற்றின் புகைப்படங்களையும் அந்த விண் கலம் எடுத்து பூமிக்கு அனுப்பிவைத்துள் ளது.
இந்நிலையில் அந்த விண்கலத்தால் எடுக்கப்பட்டுள்ள புளூட்டோவின் மலைப் பிராந்தியமானது கடந்த 100 மில்லியன் ஆண்டுகளுக்குள் உருவாகியுள்ளதாக நம்பப்படுகிறது. அத்துடன் அங்கு பண்டைய காலத்தில் மேற்பரப்பு நீர் மற்றும் ஈர்ப்புத்தன்மை இருந்தமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
புளூட்டோ கிரகத்தின் அதி துல்லியமான புகைப்படங்கள்
Reviewed by Author
on
July 18, 2015
Rating:

No comments:
Post a Comment