பொதுத்தேர்தலில் வாக்களிக்க தனியார்துறையினருக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்: தேர்தல்கள் ஆணையாளர்
தனியார் துறையினருக்கு வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி தனியார் துறையினருக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறைகளை குறைக்காது இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
1981ம் ஆண்டு 1ம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 122ம் சரத்தின் அடிப்படையில் தொழில் தருனர், தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
பணி புரியும் இடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைந்த தூரம் என்றால் அரைநாள் விடுமுறையும், 40 முதல் 100 கிலோ மீற்றர் வரையிலான தூரமென்றால் ஒருநாள் விடுமுறையும், 100 முதல் 150 கிலோ மீற்றர் வரையிலான தூரம் என்றால் இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும். சில வாக்காளர்கள் வாக்களித்து பணிக்கு திரும்ப மூன்று நாள் விடுமுறை தேவைப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலில் வாக்களிக்க தனியார்துறையினருக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்: தேர்தல்கள் ஆணையாளர்
Reviewed by NEWMANNAR
on
July 28, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 28, 2015
Rating:


No comments:
Post a Comment