த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்,,,

தமிழ் தேசி யக் கூட்ட மைப் பின் தேர் தல் விஞ்ஞா பனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங் களை இந்தியாவும் உலக நாடுகளும் புரிந்து கொண்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் க. சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்னிலங்கை பத்திரிகைகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு இடையில் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த முரணான கருத்துக்கள் சர்ச்சைகள் எழுந்துள்ளதால் அதற்கான விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.
அந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தமிbழ விடுதலைப் புலிகள் தமிbழம் கேட்டு, போராடியதற்கும் இதற்கும் எதுவித வித்தியாசமும் இல்லை என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் கடும் போக்கினை கையாள ஆரம்பித்துள்ளதென்றும், தென்னிலங்கை பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
அதேநேரம் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி கேட்டிருந்தார்கள்.
தன்னாட்டுக்காக போராடியதென்பது தந்தை செல்வா காலத்தில் ஆரம்பிக் கப்பட்டது. முற்றுத் தீர்வுகள் எதுவும் இல்லாது எமது முயற்சிகள் அனைத்தும் அரசாங்கத்தினால் மறுதலிக்கப்பட்டன.
மாற்றுத் தீர்வும் இல்லை என்ற அடிப்படையில் தான் தமிழ் மக்கள் இழந்து போன இறையாண்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று பல வகையான தீர்மானங்களை செல்வநாயகம் வட்டுக்கோட்டை தீர்மானமாக நிறைவேற்றினார்.
தமிbழ விடுதலைப் புலிகள் மிக நீண்டகாலமாக போராடி வந்தார்கள். பலமான இராணுவ அமைப்பாக இருந்து போராடி வந்தார்கள்.
போராட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதே தவிர, இனப்பிரச்சினை தீர்வுக்கு கொண்டு வரப்படவில்லை.
இனப்பிரச்சினைக்கான தீர்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றது. அதில் முதலாவதாக வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை இறையாண்மை அடிப்படையில் வடகிழக்கு இணைந்த பிரதேசத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பு, நிலம் என்பவை சுயாட்சியாக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு வேண்டும் என்கிறோம்.
சிங்கள அதி தீவிரவாத போக்காளர்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. போன்ற முற்போக்கு கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதுவானாலும் சரி எமது தீர்மானத்தை பிழையாக நோக்குகின்றனர். ஒற்றை ஆட்சிக்குள் தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அக்கட்சிகள் சொல்கின்றன.
ஒற்றை ஆட்சிக்குள் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது. 13 வது திருத்தத்திற்குள் குறைந்த பட்சமேனும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் இருக்கின்றன.
இது கடந்த கால அரசுகளினால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட வில்லை. அதனால் ஒற்றை ஆட்சிக்குள் தீர்வையோ அதிகார பகிர்வையோ பெற்றுக்கொள்ள முடியாதென்பதனையும் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
சமஷ்டி அரசியலமைப்புக்குள் இந்த பிரச்சியினை தீர்க்க முடியும். இதனையும் இந்த அரசாங்கம் செய்ய மறுக்குமாக இருந்தால் சிங்கள தீவிரவாதிகள் இதை எதிர்ப்பார்களாக இருந்தால், நிச்சயமாக தமிழ் மக்களுக்கு ஒரு சரியான தீர்விற்கு இந்திய அரசாங்கமும் உலக நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்,,,
Reviewed by Author
on
July 28, 2015
Rating:
Reviewed by Author
on
July 28, 2015
Rating:

No comments:
Post a Comment