நாம் ரணிலுக்கு வாக்களிக்கவில்லை, மைத்திரிக்கே வாக்களித்தோம்! கொந்தளிக்கும் மஹிந்த

நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்கவில்லை எனவும், மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்தோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மந்த போசனமான பொருளாதாரத்தையே ரணில் அறிமுகம் செய்கின்றார். இதற்காகவா நாம் நல்லாட்சிக்கு வாக்களித்தோம்?.
இவர்களுக்கு நாம் வாக்களிக்கவில்லையே. நாம் மைத்திரபால சிறிசேனவுக்கே வாக்களித்தோம். பலவந்தவமாக வந்து இவர்கள் ஒட்டிக்கொண்டுள்ளார்கள்.
எந்தவிதமான பொறுப்பும் இன்றி ஆட்சி பிடித்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் மருந்து மாத்திரைகளையும் விட்டு வைக்கவில்லை. 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டவை இன்று 135 ரூபாவாகும்.
மருந்து மாத்திரையின் விலை உயர்வடைந்துள்ளது.
நோயாளியின் மருந்துகளை மக்களா திருடினார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சார மேடையொன்றில் ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்த பேச்சின் மூலம் நல்லட்சியை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்துள்ளார்கள், தமது ஆட்சிக் காலத்தில் நல்லாட்சி காணப்படவில்லை என்பதனை மஹிந்த ஒப்புக்கொண்டுள்ளார் என்பதே மறைமுகமான உண்மையாகும்.
நாம் ரணிலுக்கு வாக்களிக்கவில்லை, மைத்திரிக்கே வாக்களித்தோம்! கொந்தளிக்கும் மஹிந்த
Reviewed by Author
on
July 22, 2015
Rating:

No comments:
Post a Comment