ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மேலும் நான்கு இலங்கையர்கள்! அதிர்ச்சித் தகவல்
ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையருக்கு மேலதிகமாக மேலும் நான்கு இலங்கையர்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தியாவில் சயனைட் குப்பிகள், ஜிபிஎஸ் மற்றும் செய்மதி தொலைபேசிகளுடன் 05 புலிகள் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு வடக்கு கடற்கரை கடற்படையினர்களை நீக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென் இந்தியாவில் இருந்து எவ்வித சோதனையும் இன்றி நாட்டுக்குள் கப்பல்கள் வருகின்றது. அதேபோல் றோ புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றது.
எனவே மீறிஹானையில் வெள்ளை வான் கைப்பற்றப்பட்டுள்ளமை எமதுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மேலும் நான்கு இலங்கையர்கள்! அதிர்ச்சித் தகவல்
Reviewed by Author
on
July 22, 2015
Rating:

No comments:
Post a Comment