சவப்பெட்டியில் அமர்ந்து திருமண புகைப்படங்கள்

தமது திருமண புகைப்படங்கள் மங்களகரமாக இருக்க வேண்டும் என திருமண பந்தத்தில் இணையும் ஜோடிகள் விரும்புவது வழமை.ஆனால் மரணச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை வழங்குபவர்களாக பணியாற்றும் ஜென்னி டாய் மற்றும் தரென் செங் (30 வயது) ஆகியோர் தமது திருமணப் புகைப்படங்களை சவப்பெட்டியொன்றினுள் அமர்ந்தும் அதற்கு அருகில் நின்றும் எடுத்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் சிங்கப்பூரில் புங்கொல் நகரிலுள்ள பூங்காவொன்றில் எடுக்கப்பட்டுள்ளன.
பிரபல மரணச்சடங்கு ஏற்பாட்டாளர் ஒருவரின் மகளான ஜென்னி, மரணம் தொடர்பில் சிறுவர்களுக்கான புத்தகங்களை எழுதியுள்ளார்.
மக்கள் வாழ்க்கையின் அங்கமாகவுள்ள மரணம் குறித்து சௌகரியமாக உணர வேண்டும் என தாம் விரும்புவதாக ஜென்னியும் தரெனும் தெரிவித்தனர்.
சவப்பெட்டியில் அமர்ந்து திருமண புகைப்படங்கள்
Reviewed by Author
on
July 19, 2015
Rating:

No comments:
Post a Comment