அண்மைய செய்திகள்

recent
-

பாதுகாப்பு செயலாளர் இன்று முதல் தடவையாக யாழ்ப்பாணம் விஜயம்! காணிவிடயங்கள் குறித்து கலந்துரையாடல்


பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யு.டி பஸ்நாயக்கவும் அவரின் குழுவினரும் இன்று வடக்குக்கு சென்று காணி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
பதவியேற்ற பின்னர் அவர் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.

இந்தக்குழுவில் இந்து விவகார மற்றும் மீள் குடியேற்றத்துறை அமைச்சின் அதிகாரிகள் அடங்கியிருந்தனர்.

இராணுவத்தின் வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வடக்கு செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உடனடியாக மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பகுதிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இன்றைய தினம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அண்மையில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட சந்தை சந்தி, வசாவிளான் கிழக்கு, வளலாய் பகுதிகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேரில் பார்வையிட்டுள்ளதுடன். மீள்குடியேற்ற தேவை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர்களை மாலை 3 மணியளவில் சந்தித்த அமைச்சின் செயலாளர் மீள்குடியேற்ற தேவைகள் மற்றும் மேலதிகமாக ஒரு பகுதி நிலத்தை விடுவிப்பது தொடர்பாக பேசியுள்ளனர்.

இவற்றினடிப்படையில் மேலதிகமாக இரு வாரங்களை அமைச்சு கேட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை இன்றைய சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலத்தை கருத்தில் கொண்டு கலந்து கொள்ளவில்லை என தெரியவருகின்றது.
பாதுகாப்பு செயலாளர் இன்று முதல் தடவையாக யாழ்ப்பாணம் விஜயம்! காணிவிடயங்கள் குறித்து கலந்துரையாடல் Reviewed by Author on July 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.