மன்னார் தாராபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை திறக்க அக்கிராம பெண்கள் எதிர்ப்பு- திறப்பு விழா கைவிடப்பட்டது.-Photos
வடமாகாணத்திற்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து அமைக்கப்பட்ட ஆராம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்கள் மற்றும்,தாய்,சேய் மருத்துவ நிலையம் ஆகியவை இன்று வெள்ளிக்கிழமை காலை வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து திறந்து வைத்தத போதும்,மன்னார் தாரபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட குறித்த நிலையத்தை திறக்க அக்கிராம பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் திறிய வருகையில்,,,,
வடமாகாணத்திற்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து 13 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாண்டாரவெளி ஆராம்ப சுகாதார பராமரிப்பு நிலையமும்,8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட உயிலங்குளம் ஆராம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் மற்றும் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட எருக்கலம்பிட்டி தாய்,சேய் மருத்துவ நிலையம் ஆகியவை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த திறப்பு விழா நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்பு விழா நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,அயூப் அஸ்மின்,றிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாட்டீன் டயேஸ் ,வடமாகாண சுகாதார சுதேச சுதேச மருத்துவத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரன்,வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜீட்,மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி அன்ரன் சிசில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இருதியாக 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் தாரபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆராம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை திறக்க வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் திறப்புவிழா செய்வதற்காக சென்றனர்.
எனினும் அங்கு ஒன்று கூடிய அக்கிராம பெண்கள் குறித்த நிலையத்தை திறக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,அமைச்சர் றிஸாட் பதியுதீன் இல்லாமல் குறித்த நிலையத்தை திறக்க அனுமதிக்க மாட்டோம் என அங்கு கூடிய அக்கிராம பெண்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த நிலையத்தை திறக்கவில்லை எனவும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலே திறக்கப்படும் என கூறி அங்கிருந்து சென்றனர்.
இதன் போது தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த அதிகளவான பெண்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மன்னார் தாராபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை திறக்க அக்கிராம பெண்கள் எதிர்ப்பு- திறப்பு விழா கைவிடப்பட்டது.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 03, 2015
Rating:
No comments:
Post a Comment